வாலாஜாபாத்தில் போதை வஸ்துகளைஒழிக்க யோகா செய்து விழிப்புணர்வு

X
போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான மாணவர்களின் யோகா மற்றும் சிலம்பம் நிகழ்ச்சி வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. வாலாஜாபாத் ெஹல்த் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடந்த நிகழ்ச்சியில், வாலாஜாபாத் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் யோகா மற்றும் சிலம்பம் பயின்று வரும் 250 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இம்மாணவர்கள், யோகாவில், 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக சூரிய நமஸ்காரமும், சிலம்பத்தில் தொடர்ச்சியாக 30 நிமிடங்கள் நடுக்கம்பு சுற்றுதல் உள்ளிட்டவை செய்து அசத்தினர். போதை உள்ளிட்ட கெட்ட பழக்க, வழக்கங்களை தவிர்க்கும் திறனை பெற, உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைக்குமான யோகா பயிற்சி பெற முன்வர வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
Next Story

