சிங்காரவேலர் படத்துக்கு மரியாதை

சிங்காரவேலர் படத்துக்கு மரியாதை
X
சிங்காரவேலர் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
அரியலூர், பிப்.19- பொதுவுடமைவாதியும்,சுதந்திர போராட்ட வீரருமான சிங்காரவேலரின் 184 ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி அரியலூரில் அவரது படத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் செவ்வாய்க்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினர். அரியலூர் அண்ணாசிலை அருகே வைக்கப்பட்டிருந்த சிங்காரவேலரின் படத்துக்கு, தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலர் சிவக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து நகரச் செயலர் கார்த்திக், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் அவினாஷ், ரவிக்குமார், நகர மாணவரணி அமைப்பாளர்கள் சந்தோஷ், சரவணன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். :
Next Story