அரியலூரில் சிறுதானிய விழிப்புணர்வு பேரணி, கண்காட்சி

அரியலூரில் சிறுதானிய விழிப்புணர்வு பேரணி, கண்காட்சி
X
அரியலூரில் சிறுதானிய விழிப்புணர்வு பேரணி, கண்காட்சி நடைபெற்றது.
அரியலூர், பிப். 19- சிறுதானிய திருவிழாவை முன்னிட்டு, அரியலூரில் சிறுதானிய விழிப்புணர்வு பேரணி மற்றும் சிறுதானிய உணவுப் பொருள்கள் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சத்துணவுத்திட்டம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, சிறுதானிய விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்து,  கூட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த சிறுதானியங்கள் உணவுப்பொருள் கண்காட்சியினை பார்வையிட்டார்.மேலும், சிறுதானியங்களின் பயன்பாடுகள் மற்றும் நன்மைகள் குறித்து பள்ளி மாணவ,மாணவியர்களிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.இப்பேரணியானது, அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரியலூர் நகராட்சி அலுவலகம் வழியாகச் சென்று அண்ணாசிலை அருகில் நிறைவடைந்தது. இப்பேரணியில் சுமார் 200}க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, சிறுதானியங்களின் நன்மைகள் குறித்த விழிப்புணவு வாசக அட்டைகளை கையில் ஏந்திச் சென்றனர்.மேற்கண்ட நிகழ்வுகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவானந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பிரேமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். :
Next Story