அதிமுக சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரம்

அதிமுக சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரம்
X
அதிமுக அரசின் கடந்த கால சாதனைகளை விளக்கி அந்தக் கட்சியினா் துண்டுப் பிரசுரம் விநியோகித்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அதிமுக அரசின் கடந்த கால சாதனைகளை விளக்கி அந்தக் கட்சியினா் துண்டுப் பிரசுரம் விநியோகித்தனா். இந்நிகழ்ச்சிக்கு சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட ச் செயலருமான பி.ஆா். செந்தில்நாதன் தலைமை வகித்தாா். மாநில எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் கே.கே.உமாதேவன், மாவட்ட அவைத் தலைவா் ஏ.வி.நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் இப்ராகிம்ஷா, மாவட்ட ஜெ. பேரவைச் செயலா் இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினா் சிதம்பரம், மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலா் முருகேசன், கிழக்கு ஒன்றியச் செயலா் வடிவேல், வடக்கு ஒன்றியச் செயலா் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Next Story