வைகை ஆற்றில் பழமையான அம்மன் சிலை கண்டெடுப்பு

X
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூர் பகுதியில் வைகை ஆற்றில் கானூர் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. அதன் அருகே பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. தவக்கோலத்தில் 4 கைகளுடன் சிலை உள்ளது. 2 அடி உயரம், ஒன்றரை அடி அகலம் கொண்டதாக உள்ளது. அச்சிலையை மீட்டு வட்டாட்சியர் விஜயகுமார், அதிகாரிகள் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். தொல்லியல் துறையினர் சிலையை ஆய்வு செய்தனர்.
Next Story

