கல்லுாரி மாணவர்கள் கோரிக்கை

கல்லுாரி மாணவர்கள் கோரிக்கை
X
கோரிக்கை
ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த, 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இயந்திரம் பழுது காரணமாக சில மாதங்களாக குடிநீர் வரவில்லை.இதனால், குடிநீர் கிடைக்காமல் மாணவர்கள் தவிக்கின்றனர். குடிநீருக்காக நாள்தோறும் அரை கி.மீ., துாரம் நடந்து சென்று, கடைகளில் விற்கப்படும் தண்ணீர் கேன்களை வாங்கி வருகின்றனர். எனவே, பழுதடைந்த இயந்திரத்தை சரிசெய்து, தடையின்றி குடிநீர் கிடைக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story