சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்தநாள் விழா தவெக சார்பில் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை

தவெக  சார்பில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை
காங்கேயம் பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.  திருப்பூர் கிழக்கு மாவட்டம் காங்கேயம் நகர ஒன்றிய கழகம் சார்பில் நடைபெற்ற விழாவில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் யுவராஜ் தலைமையில் காங்கேயம் நகர செயலாளர் ராகுல் மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் இளைஞர் அணி அமைப்புகள் உட்பட 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story