ராமநாதபுரம் தாலுகா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்னெடுத்து அலுவலகம் முன்பு மாலை நேரம் அலுவலகத்தை பூட்டிவிட்டு அலுவலகப் பணியை புறக்கணித்து கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அலுவலகத்தை பூட்டிவிட்டு அலுவலகம் வளாகத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது . இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக ePMS மென்பொருளில் உள்ள குறைபாடுகளை உடனடியாக களைந்திட வேண்டும், நகரப் பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் பட்டா வழங்கும் திட்டம், புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டம் ஆகியவற்றிற்கு குறைந்தபட்ச கால அவகாசம் வழங்கிட வேண்டும், இளநிலை உதவியாளர்/தட்டச்சர் இடையேயான ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் செய்து உதவியாளர் பட்டியல் வெளியிட CRA தெளிவான சுற்றறிக்கை வழங்கிட வேண்டும் , பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும் , மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும் , முழுப்புலன் பட்டா மாறுதல் செய்திடும் அதிகாரத்தை தலைமை இடத்து துணை வட்டாட்சியருக்கு பிரித்து வழங்கியதை உடனடியாக கைவிட்டு பழைய முறையே தொடர்ந்திட அனுமதித்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னெடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story

