ராமநாதபுரம் பாரதிய ஜனதா கொடியை சேதப்படுத்தியவர் மீது வழக்கு பதிவு

தொண்டியில் பா.ஜ.க. நிர்வாகி காரில் கட்டியிருந்த கொடியை சேதப்படுத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு
ராமநாதபுரம் சூரன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்தானம் மகன் சண்மு கநாதன், வக்கீல் தொழில் செய்து வரும் இவர் பாரதிய ஜனதா கட்சியின் பொருளா தார பிரிவு மாநில செய லாளராக பொறுப்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1 ந்தேதி மாவட்ட பாஜக தலை வர் முரளிதரன் மற்றும் கட்சி நிர்வாகி களுடன் தொண்டி பகுதிக்கு சென்ற இவர் தொண்டி டக்காஸ் அல்வா கடை அருகே இவரது இனோவா காரை நிறுத்தி யி ருந்ததாக கூறப்படுகிறது. அப் போது மர்ம நபர்கள் இவரது காரில் கட்டியி ருந்த பாஜக பிளாஸ்டிக் கொடியை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாஜக நிர்வாகி சண் முகநாதன் தொண்டி போலீசில் புகார் அளித்தார். இது குறித்துநேற்றுதொண்டி போலீஸ் சப்இன்ஸ் பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார்வழக்குபதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
Next Story