ராமநாதபுரம் விஷம் குடித்து வாலிபர் பலி

திருவாடானை அருகே விஷம் குடித்து சிகிச்சையில் இருந்த வாலிபர் பலி கொலையா தற்கொலையா என போலீசா விசாரணை
ராமநாதபுரம் திருவாடானை அருகே நத்தக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் மகன் வெங்கடேஷ் (29).இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில் வாலிபர் வெங்கடேஷ் அடிக்கடி மது குடித்து விட்டு எந்த வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது தாய் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வெங்கடேஷ் கடந்த பிப்ரவரி 15ம் தேதியன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து விட்டு உயிருக்கு போராடியுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் வெங்கடேஷ் உயிரிழந்துள்ளார்.இதுகுறித்து கொலையா தக் கொலையா என திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story