தாராபுரத்தில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி.

தாராபுரத்தில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி.
X
ஊட்டச்சத்து பானமான கள் இறக்க விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும், விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு மீட்டர் பொருத்தும் செயலை கைவிடுவதுடன், இலவச மின்சாரத்தையே ரத்து செய்து விட்டு விவசாய கமிஷன் பரிந்துரையை செயல்படுத்தினாலே போதுமானது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களில் கள் ஒரு உணவுப் பொருளாக பாவிக்கப்பட்டு அதை இறக்கி விற்பனை செய்ய அனுமதி கொடுத்திருக்கிறார்கள் கள்ளிலே கலப்படம் செய்கிறார்கள் என்றால் அரசு அவர்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர உடலுக்கு ஊட்டச்சத்தை தரும் பானத்தை தடை செய்வது முறையல்ல. தமிழ்நாட்டில் பொதுமக்கள் உபயோகிக்கும் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது, தற்போது இலவச மின்சாரத்திற்காக வழங்கப்பட்ட அத்தனை இணைப்புகளுக்கும் அரசு மீட்டர் பொருத்தும் பணியை செய்து வருகிறது இதற்கு காரணம் கேட்டால் விவசாயிகளுக்கு 18 மணி நேரம்தான் மின்சாரம் வழங்குகிறோம் இதர அமைப்புகளுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வேண்டிய உள்ளது இந்நிலையில் இலவச மின்சாரத்தை பெற்ற சில விவசாயிகள் அதை முறைகேடாக உபயோகித்து வருகிறார்கள், இதைப்போல் விவசாய மல்லாத உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு குறித்து அறிந்து கொள்ளவே மின் மீட்டர் பொருத்துகிறோம் எனக் கூறுகிறார்கள்,  விவசாயிக்கு இலவச மின்சாரம் தேவையில்லை இலவசமாக தர்மம் பெரும் சூழ்நிலையில் விவசாயிகள் தள்ளப்படவில்லை எனவே அரசு இலவச மின்சாரத்தை இனி வழங்கவே வேண்டாம் அதற்கு பதிலாக சம்பள கமிஷன் பரிந்துரையை நிறைவேற்றுவதைப் போல் விவசாய கமிஷன் பரிந்துரையையும் நிறைவேற்றி விட்டுப் போகலாமே இதற்குப் பிறகு எங்களுக்கு எதற்கு மானியம் எதற்கு விவசாயிகளுக்கு சலுகை, கடன் தள்ளுபடி எதற்கு பயிர் காப்பீடு எதற்கு எதுவுமே வேண்டாம் சம்பள கமிஷன் பரிந்துரையை ஏற்று நடைமுறைப்படுத்துவது போல் விவசாய கமிஷன் நடைமுறையை அமல்படுத்தி விட்டு எந்த சலுகையையும் விவசாயிகளுக்கு நீங்கள் தர வேண்டாம், வழங்கப்படும் மின்சாரத்திற்கு கடைகளுக்கு வழங்கப்படும் மின் கட்டணத்தை போல் விவசாயத்திற்கும் அதன் உபயோகத்திற்கும் மின் கட்டணத்தை வசூளித்து கொள்ளுங்கள், 2004 ஆம் ஆண்டுகளில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதும் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் விவசாய கமிஷன் போடப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்பு மறு ஆண்டு அதை கிடப்பில் போட்டு விட்டார்கள் இதற்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கமிஷனை நடைமுறைப்படுத்துவோம் என கூறிவிட்டு அதையும் அவர்கள் கிடப்பிலேயே போட்டு இருக்கிறார்கள், நாங்கள் சுதந்திர இந்தியாவின் கையேந்திகளும் அல்ல, பிச்சைக்காரர்களும் அல்ல எனவே எங்களுக்கு இலவச மின்சாரம் வேண்டாம், விவசாய கமிஷனை நடைமுறைப்படுத்தட்டும் ,அரசியலமைப்புச் சட்டம் 14 ஐ அரசியல் கட்சிகள் மதித்து நடக்க கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேட்டியின் போது கூறினார்,
Next Story