பாலம் பராமரிப்பு பணி

X
ஈரோடு -கரூர் வழியாக செல்லும் ரெயில் பாதையில் பாசூர் -ஊஞ்சலூர் ரெயில் நிலையத்திற்கு இடையே ரெயில்வே பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வருகிற 20, 23, 25 மற்றும் 28ஆம் தேதி ஆகிய நாட்களில் மட்டும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு -திருச்சி செல்லும் பயணிகள் ரயில் (56809) சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 20, 23, 25 மற்றும் 28ஆம் தேதி ஆகிய நாட்களில் மட்டும் திருச்சியில் இருந்து ஈரோட்டுக்கு கிளம்பும் பயணிகள் ரயில் கரூர் வரை மட்டுமே இயங்கும். மேற்கொண்ட நாட்களில் இந்த ரயில் ஈரோடு வரை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் செங்கோட்டையில் இருந்து ஈரோட்டுக்கு செல்லும் பயணிகள் ரயில் சேவையிலும் 20, 23, 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி செங்கோட்டையில் இருந்து ஈரோடு கிளம்பி செல்லும் ரயில் மேற்கொண்ட நாட்களில் செங்கோட்டையில் இருந்து கரூர் வரை மட்டுமே இயங்கும்.ஈரோடு வரை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் ரயில் சேவையிலும் 20, 23, 25 மற்றும் 28 ஆகிய நாட்களில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ஈரோட்டில் இருந்து கிளம்புவதற்கு பதிலாக கரூரில் இருந்து செங்கோட்டைக்கு இந்த பயணிகள் ரயில் கிளம்பி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சேலம் கோட்டம் ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

