தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக சுமை தூக்குவோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் பொருள் வாணிப கழக சுமை தூக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் வருகை பதிவேட்டில் தங்களது பெயர்களை இணைக்க வேண்டும் என்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கான சங்க அங்கீகார தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கூறுகையில் கடந்த 17 ஆண்டுகளாக சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய தொடர்ந்து வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள நுகர் பொருள் வாணிப கழகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் தற்போது இரண்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் தங்களது கோரிக்கைகளை ஏற்கவில்லை என்றால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தொழிலாளர் நல வாரியத்தில் கடிதம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்
Next Story