நித்திரவிளை : மனைவியை வெட்டிக் கொன்ற கணவருக்கு ஆயுள்

X
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாபுறம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மனைவி சவுமியா. ராஜேஷ் வேலைக்கு போகாமல் மனைவியை அடித்து துன்புறுத்தி மனைவியின் தாலி செயின் உள்பட நகைகளை அபகரித்து, விற்றுள்ளார். மேலும் அதிக வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்தார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு சண்டை ஏற்பட்டது. இந்த தகராறில் கடந்த 2015 ஆம் ஆண்டு மனைவியை கழுத்து அறுத்து கொன்றார். இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர். இந்த வழக்கு குழித்துறை மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரய்யா 10 ஆண்டுகளுக்கு பின்பு இன்று ராஜேஷ்க்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
Next Story

