அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

X
Komarapalayam King 24x7 |19 Feb 2025 7:18 PM ISTகுமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம், இளைஞர் சென்சுருள் சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம், இளைஞர் சென்சுருள் சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. சிறப்பு பேச்சாளராக நெடுஞ்சாலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முருகேசன் பங்கேற்று பேசினார். ஹெல்மெட், காப்பீடு, சீட் பெல்ட், ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம், இளைஞர் சென்சுருள் சங்கம் திட்ட அலுவலர் பேராசிரியர் கோவிந்தராஜ் செய்திருந்தார். கல்லூரி மாணவ, மாணவியர், பேராசிரிய பெருமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
Next Story
