சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு “மஞ்சப்பை விருதுகள்”

சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு “மஞ்சப்பை விருதுகள்”
X
சிவகங்கை மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு “மஞ்சப்பை விருதுகள்” வழங்கப்படவுள்ளது.
சிவகங்கை மாவட்டம், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு “மஞ்சப்பை விருதுகள்” வழங்கப்படவுள்ளது. "மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர், 2022-23 நிதியாண்டிற்கான சட்டமன்றக் கூட்டத்தில் மஞ்சப்பை விருதுகளை அறிவித்தார். அதன்படி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் (SUP) கை பைகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு இவ்விருதுவகள் வழங்கப்படவுள்ளது. விருது பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 5 லட்சமும் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படவுள்ளது. இவ்வறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் (TNPCB), ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகப் சுற்றுச் சுழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த பள்ளிகள்/கல்லூரிகள்/வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும். இவ்விருதிற்கான விண்ணப்பப் படிவத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளமான (http://sivaganga..nic.in) என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, விண்ணப்ப படிவத்தில் உள்ள அனைத்து இணைப்புகளிலும் தனிநபர்/அமைப்புத் தலைவர் முறையாக கையொப்பமிட்டு, கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு (CD) பிரதிகள் இரண்டினை சிவகங்கை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், மாசு கட்டுப்பாடு வாரிய அலுகத்தில் வருகின்ற 01.05.2025 ஆம் தேதிக்குள் சமர்ப்பித்திடல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story