சொந்த நூலகங்களுக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம்

சொந்த நூலகங்களுக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம்
X
சிவகங்கை மாவட்டம், தனிநபர் இல்லங்களில் சிறப்பாக பராமரிக்கப்படும் நூலகத்திற்கு ”சொந்த நூலகங்களுக்கான விருது” வழங்கப்படவுள்ளது.
சிவகங்கை மாவட்டம், தனிநபர் இல்லங்களில் சிறப்பாக பராமரிக்கப்படும் நூலகத்திற்கு ”சொந்த நூலகங்களுக்கான விருது” வழங்கப்படவுள்ளது. உரிய விபரங்களுடன் வருகின்ற 25.02.2025 ஆம் தேதிக்குள் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரியின் வாயிலாகவோ அல்லது குறிப்பிட்டுள்ள முகவரியில் நேரிலோ விண்ணப்பித்திடலாம் தமிழ்நாடு அரசு வீடு தோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடு தோறும் நூலகங்கள் அமைத்துச் சிறப்பாகப் பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களைக் கண்டறிந்து, சொந்த நூலகங்களுக்கான விருது வழங்கப்படும் என 2024-2025 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட நூலக அலுவலர் தலைமையில் குழு அமைத்து, தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்களை நேரில் ஆய்வு செய்து, குழுவின் பரிசீலினைக்கு உட்பட்டு மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் தனிநபர் இல்லங்களில் ஒரு நூலகம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது. அவ்வாறாக, தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 21.02.2025 முதல் 02.03.2025 வரை நடைபெறவுள்ள புத்தக திருவிழாவில் ”சொந்த நூலகங்களுக்கான விருது" (ரூ.3.000/-மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ்) வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. எனவே, தனிநபர் இல்லங்களில் நூலகம் அமைத்து பராமரித்து வரும் புத்தக ஆர்வளர்கள், தங்களது நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை, எந்தெந்த வகையான நூல்கள் மற்றும் அரிய வகை நூல்கள் உள்ளது உள்ளிட்ட விவரங்களுடன் தங்களது பெயர், முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது மாவட்ட நூலக அலுவலர், மாவட்ட நூலக அலுவலகம், 133-D மஜீத்ரோடு சிவகங்கை-630561 என்ற முகவரியில் நேரடியாகவோ தொடர்பு கொண்டு, வருகின்ற 25.02.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திடல் வேண்டும். மேலும், ”சொந்த நூல்களுக்கான விருது” குறித்த கூடுதல் விபரங்களுக்கு 63741 08317 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் விபரங்கள் பெறலாம். எனவே, சொந்த நூலகங்களை பராமரிக்கும் தனிநபர்கள், தங்களால் பராமரிக்கப்பட்டு வரும் நூல்கள் குறித்த விபரங்களுடன் சொந்த நூல்களுக்கான விருதிற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story