விவசாய நிலத்தில் ரசாயன கழிவுகள் எரிக்கபடுவதால் பொதுமக்கள் அவதி
Komarapalayam King 24x7 |19 Feb 2025 8:42 PM ISTகுமாரபாளையம் அருகே விவசாய நிலத்தில் ரசாயன கழிவுகள் எரிக்கபடுவதால் பொதுமக்கள் அவதி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் பைபாஸ் சாலையில் அருவங்காடு என்ற பகுதி அமைந்துள்ளது. விவசாய நிலங்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் வாகனங்களில் வரும் மர்ம நபர்கள் ரசாயன கலவைகள் கொண்ட இரும்பு பேரல்கள் குப்பை கழிவுகளை அருகில் உள்ள விவசாய நிலத்தில் வீசிவிட்டு தீ வைத்து செல்கின்றனர்.இதன் காரணமாக இரவு நேரத்தில் கொழுந்து விட்டு எரியும் தீ காரணமாக ரசாயன கலவைகள் மற்றும் கழிவுகள் எரிவதால் அதிலிருந்து வெளிவரும் ஒருவித நச்சுத்தன்மை காரணமாக பெரும் புகை ஏற்பட்டு அது அருகில் உள்ள பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே இது குறித்த அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சட்ட விரோதமாக கெமிக்கல் ரசாயன பேரல்கள் மற்றும் கழிவுகளை கொட்டி தீ வைக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story


