சம்பளம் வழங்காமல் பழிவாங்கும் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வரை கண்டித்து திடீர் கண்டன ஆர்ப்பாட்டம்

X
Komarapalayam King 24x7 |19 Feb 2025 8:52 PM ISTகுமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி பணி புரியும் கௌரவ விரிவுரையாளர்களை மரியாதை குறைவாகவும் உரிய நேரத்தில் சம்பளம் வழங்காமல் பழிவாங்கும் கல்லூரி முதல்வரை கண்டித்து திடீர் கண்டன ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இந்த கல்லூரியில் சுமார் 24 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர் இந்த விரிவுரையாளர்களுக்கு அரசு உத்தரவுப்படி காலை 12.20 மணிக்கு பணிக்கு வர வேண்டும் என்ற உத்தரவுள்ளது மேலும் மாதத்தில் ஐந்தாம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் ஆனால் விரிவுரையாளர்கள் 12 மணிக்கு கல்லூரிக்கு வந்தால் அவர்களை நீண்ட நேரம் காக்க வைத்து தகாத வார்த்தைகளில் பேசியும் அவமானப்படுத்துவதாகவும் கல்லூரியின் முதல்வர் ரேணுகா நடந்து வருவதாக விரிவுரையாளர்கள் தெரிவித்தனர் மேலும் சம்பளம் குறிப்பிட்ட தேதியில் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தி வழங்குவதாலும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விரிவுரையாளர்கள் தெரிவித்தனர் இது அவர்கள் கல்லூரியில் நுழைவாயில் முன்பு இன்று திடீரென கல்லூரியில் முதல்வர் ரேணுகாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது
Next Story
