தமிழ் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் வ.ஐ.சுப்பிரமணியம் பிறந்த நாள் விழா

X
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மேனாள் துணைவேந்தர் முதுமுனைவர் வ.ஐ.சுப்பிரமணியம் 99ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமையன்று துணைவேந்தர் (பொ) குழு உறுப்பினர்கள் சி.அமுதா, மருத்துவர் பெ.பாரதஜோதி ஆகியோர் தலைமையில், துணைவேந்தர் இல்லம் அருகில் அமைந்துள்ள அன்னாரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், பதிவாளர் (பொ) கோ.பன்னீர்செல்வம், புலத்தலைவர்கள், துறைத்தலைவர்கள், கல்வியாளர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சு.முருகன், அலுவல்நிலைப் பணியாளர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
Next Story

