ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி.

ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இருந்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார் ஆரணி நகர காவல்துறை ஆய்வாளர் விநாயகமூர்த்தி..
ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இருந்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து செல்வோம் எனும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு மாவட்ட செயலாளர் ப.லட்சுமணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சொக்கலிங்கம் அனைவரையும் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் அருண்பிரசாத், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் ரமாபிரபா, உமாராணி, பூங்கொடி, கொடி மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். சிறப்பு விருந்தினராக ஆரணி நகர காவல்துறை ஆய்வாளர் விநாயகமூர்த்தி கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். வட்டாரக்கல்வி அலுவலர் கமலக்கண்ணன், எஸ்.ஐ சுந்தரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழிபபுணர்வு ஊர்வலம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பழைய பஸ்நிலையம், காந்திரோடு, சூரியகுளம், நகராட்சி அலுவலகம் வழியாக மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தை சென்றடைந்தனர். முடிவில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் நன்றி கூறினார்.
Next Story