உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாள் விழா

உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாள் விழா
X
விழா
கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான் விக்டர் முன்னிலை வகித்தார். மாணவர் தினேஷ் வரவேற்றார். கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் பிரவீனா வாழ்த்துரை வழங்கினார்.நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர் உ.வே.சாமிநாத ஐயரின் மொழிப்பற்று குறித்து விளக்கவுரை வழங்கப்பட்டது. தமிழ்த்துறை உதவி பேராசிரியர்கள் பாண்டியன், கோமதி, பார்த்திபன், நித்யா, சுபலட்சுமி, பரசுராமன் ஆகியோர் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் பன்னீர்செல்வம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாணவிகள் ஜெயபாரதி, அபிநயா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவர் பாலாஜி நன்றி கூறினார்.
Next Story