ஆதிதிராவிடர் விடுதியில் சப்--கலெக்டர் ஆய்வு

X
சேந்தநாடு அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளை சப்-கலெக்டர் ஆனந்த் குமார்சிங் ஆய்வு செய்தார். உளுந்துார்பேட்டை தாலுகா, சேந்தநாட்டில் அரசு ஆதிதிராவிட மாணவ-மாணவியர் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளை திருக்கோவிலுார் சப்-கலெக்டர் ஆனந்த் குமார்சிங் நேரில் ஆய்வு செய்தார். அப்போது சமையல் அறையை ஆய்வு செய்து, சமைக்கப்படும் உணவு முறைகள் குறித்து கேட்டார். தொடர்ந்து மாணவர்களிடம் அன்றாட நடவடிக்கைகள் குறித்தும், உணவுகள் முறையாக வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார்.
Next Story

