அரியலூர் கிருஷ்ணன் கோயிலில் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

அரியலூர் கிருஷ்ணன் கோயிலில் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு
X
அரியலூர் கிருஷ்ணன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சீரமைப்பு பணியின் போது, 285 ஆண்டுகளுக்கு முன்பு ஜமீன்தார் காலத்தில் நிலதானம் வழங்கிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
அரியலூர், பிப்.20- அரியலூர் கிருஷ்ணன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சீரமைப்பு பணிகளின் போது, அங்குள்ள உள் மண்டபத்தில், தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட 4 அடி உயரமுள்ள கல்வெட்டு கண்டறியப்பட்டது. இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அரியலூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்று துறைத் தலைவர் ரவி சம்பவ இடத்துக்கு வந்து கல்வெட்டை ஆராய்ச்சி மேற்கொண்ட பிறகு அவர் தெரிவிக்கையில், பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான வாமன அவதார சிற்பம் பொறுக்கப்பட்டுள்ளது.இக்கல்வெட்டு சுமார் 1739 ஆம் ஆண்டு, அரியலூர் ஜமீன்தார் விஜய ஒப்பில்லாத மழவராயரால் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் பெருமாள் கோயிலுக்கும், கிருஷ்ணன் கோயிலுக்கும் நிலதானம் வழங்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.பலகை கல்வெட்டில் இடம்பெற்றுள்ள தகவல்களை சேகரித்து வருகிறோம். விரைவில் படிமங்கள் எடுக்கப்பட்டு, கல்வெட்டின் முழு வாசகமும் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். :
Next Story