கீழகாவட்டாங்குறிச்சி அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்துத் தர கோரிக்கை

அரியலூர், பிப்.20- அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த கீழகாவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரிடம், அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவர் தங்க.சண்முகசுந்தரம் புதன்கிழமை கோரிக்கை மனுவை அளித்தார்.அப்பள்ளிக்கு 3 கூடுதல் வகுப்பறைகளை புதன்கிழமை திறந்து வைத்த அமைச்சர் சா.சி.சிவசங்கரிடம், தங்க.சண்முகசுந்தரம் அளித்த மனுவில், 450 மாணவ,மாணவிகள் படித்து வரும் இப்பள்ளிக்கு தேர்வு மையம் அமைக்க வேண்டும். பள்ளியின் சுற்றுச்சுவரின் உயரம் குறைவாக இருப்பதினால் அதனை உயர்த்தி கட்டித் தரவேண்டும். மாணவர்களுக்கு கழிவறை கட்டடங்களைகட்டித் தரவேண்டும். 65 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வரும் தட்டாஞ்சாவடி கிராம மக்கள் 16 பேருக்கு பட்டா வழங்கிட வேண்டும். கரைவெட்டி ஏரிக்கு 1958 - இல் இடம் கொடுத்தவர்களுக்கு வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட விவசாய நிலங்கள் 1958 ஆம் ஆண்டில் ஏரிகளாகவும், நீர்நிலைகளாகவும், தோப்பு புறம்போக்கு ஓடை வாரி புறம்போக்காக இருந்த நிலங்களை வகைபாடு மாற்றம் செய்து தர வேண்டும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

