அதிமுக தின்னைபிரசாரம் ; முன்னாள் அமைச்சர் பங்கேற்பு 

அதிமுக தின்னைபிரசாரம் ; முன்னாள் அமைச்சர் பங்கேற்பு 
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட  அம்மா பேரவை சார்பாக அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக திண்ணை பிரச்சாரம் மற்றும் துண்டுப் பிரசுரம் விநியோகம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜாராம் முன்னிலை வகித்தார்.        இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான ராஜலெட்சுமி  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் தோவாளை ஒன்றிய செயலாளர் சி.முத்துக்குமார், கிழக்கு மாவட்ட அம்மா பேரவை தலைவர் வழக்கறிஞர் என். பார்த்தசாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story