இளைஞர் காங்கிரஸ் கட்சியினரிடம் அதிருப்தி

இளைஞர் காங்கிரஸ் கட்சியினரிடம் அதிருப்தி
X
மதுரையில் இளைஞர் காங்கிரஸ் கட்சி தேர்தலில் கட்சியினரிடம் அதிருப்தி நிலவுகிறது.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக 3 பேர் போட்டியிடுகின்றனர். இதில் செல்வப் பெருந்தகை அணி சார்பாக உசிலம்பட்டி தாலுகா பண்ணைப்பட்டி போத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த அழகுமுத்து மனைவி சீதா (39)என்ற பெண் மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக போட்டியிடுகிறார். மற்றும் மதுரை தெற்கு மாவட்டத்தின் சார்பில் மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன்குளம் பகுதியை சேர்ந்த பழனிக்குமார் மகன் சௌந்தர பாண்டியன், ( 32) மதுரை திருநகர் பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் வித்யாபதி ( 31)என மும்முனை போட்டி நடைபெற்று வருகிறது. இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு வயது வரம்பு 35 என விண்ணப்பதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் செல்வப் பெருந்தகை அணி சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் சீதாவிற்க்கு 39 வயது ஆகிறது. விதிமுறைகளின் படி அவர் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட முடியாது . இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் ராகுல் காந்தி, வேணுகோபால் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனாலும் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை தனது சொந்த செல்வாக்கினால் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் விதிமுறைகளை மீறி செயல்படுகிறார். இதனால் கட்சி நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. புதிதாக நடைபெற உள்ள இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அகில இந்திய தலைமைக்கு புகார் அளித்தும் மதுரை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அவர்களுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். வெளிப்படை தன்மை யில்லாமல் வெறும் கண்துடைப்பான தேர்தல் நடைபெறுவதற்கு பதிலாக கட்சியிலிருந்து நேரடியாக உறுப்பினர்களை நியமனம் செய்யலாம் என காங்கிரஸ் கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Next Story