திருப்பத்தூரில் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடந்தது

திருப்பத்தூரில் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடந்தது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடந்தது திருப்பத்தூர்மாவட்ட திமுக சார்பில் செயற்குழு கூட்டம் நேற்று திருப்பத்துார் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தி.மலை எம்பி அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் தேவராஜி, நல்லதம்பி கலந்து கொண்டனர். அப்போது திருப்பத்துார் மாவட்டத்தில் தமிழக முதல்வர் பிறந்த நாளை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும். மேலும் எந்தெந்த அணி நிர்வாகிகள் தலைமையில் கொண்டாடுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். அதற்கு தகுந்தார்ப்போல் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சூரியகுமார்,நகர செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் மோகன்ராஜ், உமாகன்ரங்கம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வடிவேல், நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story