மூதாட்டி பலி

மூதாட்டி பலி
X
மது போதையில் வாய்க்காலில் விழுந்த மூதாட்டி பலி
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வேலம்மாள் (69). இவருக்கு மதுபழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு, குடிபோதையில் இருந்த வேலம்மாள் கீழ் பவானி கிளை வாய்க்கால் பாலத்தில் அமர்ந்து மது அருந்தி விட்டு, சிக்கன் ரைஸ் சாப்பிட்டு சாப்பிட்டுள்ளார். இந்நிலையில், அவர் திடீரென வாய்க்காலில் தவறி விழுந்ததாக தெரிகிறது. இதனையடுத்து, அவரது உறவினர்கள் தேடி வந்த நிலையில், நேற்று மாலை தம்பிக்கலை அய்யன்கோவில் பகுதியில் உள்ள வாய்க்காலில் வேலம்மாள் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதே போன்று, திங்களூர் நல்லாம்பட்டியைச் சேர்ந்தவர் மாறன் (65). கடந்த 16ம் தேதி வெளியே சென்ற அவர், மாலை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, அவரது உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில், நல்லாம்பட்டி தாசம்புதூர் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில், மாறன் சடலமாக மீடக்கப்பட்டார். இதுகுறித்து அவரது மகள் அளித்த புகாரின் பேரில், திங்களூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் மாறன் மயக்கம் போட்டு, வாய்க்காலில் தவறி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.
Next Story