ஆம்பூர் அருகே எருது விடும் விழாவில் பங்கேற்ற எருது ரயில் மோதி உயிரிழப்பு!

ஆம்பூர் அருகே எருது விடும் விழாவில் பங்கேற்ற எருது ரயில் மோதி உயிரிழப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே எருது விடும் விழாவில் பங்கேற்ற எருது ரயில் மோதி உயிரிழப்பு! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியில் இன்று காலை எருது விடும் திருவிழா நடைபெற்றது இந்த திருவிழாவில் போட்டியில் கலந்து கொள்ள வேலூர் கிருஷ்ணகிரி குடியாத்தம் ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட எருதுகள் கலந்து ஓடின இந்நிலையில் போட்டியில் பங்கேற்ற குடியாத்தம் தாலுக்கா மேல்பட்டி பகுதியை சேர்ந்த மகேசுஸ் என்பவருக்கு சொந்தமான சங்கராணி என்ற எருது ஆம்பூர் வாணியம்பாடி இடையே ரயில் தண்டவாளத்தில் ஓடிய போது பின்னால் வந்த ஒரு ரயில் மோதி எருது தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது இதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியம்பாடி அருகே நடைபெற்ற எருது விடும் விழாவில் பங்கேற்ற எருது ஒன்று ரயில் மோதி உயிரிழப்பு ஏற்ப்பட்டது இதுபோல் தொடர் விபத்தில் எருதுகள் உயிரிழப்பு ஏற்பட்டு வருகின்றது இதற்க்கு எல்லாம் துறை சேர்ந்த அதிகாரிகள் மெத்தன போக்காக செயல் படுவதுதான் காரணம் என்று எருதுவின் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு முன் வைக்கின்றனர் மாவட்ட நிருவாகம் கருத்தில் கொண்டு இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாட்டின் உரிமையாளர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர் இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story