ஆலங்குளத்தில் விளைச்சல் அதிகரிப்பால் பெரிய வெங்காயம் விலை வீழ்ச்சி

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரிய வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது பெரிய வெங்காயம் அமோக விளைச்சல் கண்டுள்ளது. இதனால் ஆலங்குளம் தினசரி மார்க்கெட்டிற்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால கடந்த மாதம் வரை ஒரு கிலோ ரூ.70க்கு விற்கப்பட்டு வந்த பெரிய வெங்காயம் நிலையில் இன்று விலை வெகுவாக குறைந்து 1 கிலோ பெரிய வெங்காயம் ரூ.30க்கு விலைபோனது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தமிழக அரசு உடனே பெரிய வெங்காயத்துக்கு விலை நிர்ணயம் செய்து தர வேண்டும் என அப்பகுதியை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதன் குறிப்பிடத்தக்கது.
Next Story

