ஜெயங்கொண்டத்தில் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி

X
அரியலூர், பிப்.20- அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு மாநில திட்டக் குழு, தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், தொழில்முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. பயிற்சியை மாவட்ட திட்டக் குழு அலுவலர் தங்கம் குத்துவிளக்கேற்றி வைத்து, தொடக்கி வைத்து, இப்பயிற்சி மூலம் தொழில்முனைவோர்கள் தங்களது தொழிலை மேம்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.பயிற்றுநர் அருண்குமார் கலந்து கொண்டு 30 பயனாளிகளுக்கு பயிற்சி அளித்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர், மேம்பாட்டு திட்ட அலுவலர் மற்றும் தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட திட்ட மேலாளர் பிரவீன் செய்திருந்தார்.
Next Story

