ராமநாதபுரம் மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மூன்று விசைப்படகுடன் 10 மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை நடவடிக்கை:
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று நேற்று இரவு மன்னார் வடக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு விசைப்படகையும் அதிலிருந்த 4 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு பின் ராமு, ஜார்ஜ், கென்னடி,ஜோதிராஜன் ஆகிய நான்கு பேரும் படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனிடையே இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு விசைப்படகையும் அதிலிருந்த டெம்ரோ, அந்தோணி, செல்வராஜ் உட்பட ஆறு மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படை மீனவர்களை படகுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு பின் ஆறு மீனவர்களை இரண்டு படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதன் அடிப்படையில் மொத்தமாக மூன்று விசைப்படகுடன் 10 ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை கடற்படை முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Next Story