ராமநாதபுரம் கடத்தல் பொருள் பறிமுதல்

இலங்கைக்கு கடல் வழியாக கடத்த இருந்த 3.80 லட்சம் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்: ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த பிரப்பன்வலசை முஸ்லிம் தெரு பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசார் நள்ளிரவு அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது இலங்கை கடத்துவதற்காக 19 பண்டல்களில் 3 லட்சத்து 80 ஆயிரம் சிகரெட் அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததையடுத்து வெளிநாட்டு சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்த ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசார் வெளிநாட்டு சிகரெட் பண்டல்களை இலங்கைக்கு கடத்துவதற்காக அப்பகுதியில் பதுக்கி வைத்திருந்தது யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட் ஒன்று ரூ.165 விற்பனை செய்யப்பட்டு வருவதன் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் மதிப்பு 6.27 கோடி (இலங்கை மதிப்பு) எனவும் இந்திய மதிப்பில் 3 கோடி ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story