ராமநாதபுரம் அதிக பேருந்துகள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

ராமநாதபுரம் அதிக பேருந்துகள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை
X
கீழக்கரை செல்லும் அரசு பேருந்துகள் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும் குறைவான பேருந்து வருவதால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்
ராமநாதபுரம் கீழக்கரை செல்லும் அரசு பேருந்துகள் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும் குறைவான பேருந்து வருவதால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர் அதேபோல் தினமும் பள்ளி நேரங்களில் மாற்றுப் பேருந்துகளை அனுப்புவதினால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு பேருந்தில் பின்புறம் தொங்கிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் ஆபத்து உணராமல் பள்ளிக்குச் செல்கின்றனர். அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மெத்தன போக்கையை கையாண்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சித் தலைவர் கூடுதல் கவனம் செலுத்தி பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு தடையின்றி அரசு பேருந்து இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story