தவெக சார்பில் மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் நினைவு தினத்தை முன்னிட்டு மலர் தூவி மரியாதை
கரூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணி, இணைச் செயலாளர் சதாசிவம் தலைமையில் மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் 64 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு குளித்தலை சுங்ககேட் பகுதியில் அம்மையார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் குளித்தலை ஒன்றிய செயலாளர் நிரேஷ் குமார், தோகமலை ஒன்றிய செயலாளர் சந்தோஷ் குமார் மற்றும் குளித்தலை, தோகைமலை, கடவூர், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய நிர்வாகிகள், நங்கவரம், மருதூர் பேரூராட்சி நிர்வாகிகள், மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். குளித்தலை நகரச் செயலாளர் விஜயகுமார் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்திருந்தார்.
Next Story