நாகை மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில்

சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் நினைவு தினம் அனுசரிப்பு
தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களின் ஒருவரான, சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் நினைவு தினம் நாகையில் அனுசரிக்கப்பட்டது. நாகை மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், அவுரித்திடலில் வைக்கப்பட்டிருந்த திரு உருவப்படத்திற்கு, மாவட்ட செயலாளர் சுகுமாறன் தலைமையில், கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அஞ்சலை அம்மாளின் வீரத்தை போற்றி முழக்கங்களை எழுப்பினர். நிகழ்ச்சியில், தவெக மாவட்ட பொறுப்பாளர்கள், நகர, ஒன்றிய, பேரூர் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story