சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியர் திமுக நிர்வாகிகள் வேதனை

பாதுகாப்பான படகுப் போக்குவரத்து ஏற்படுத்திட வேண்டும் ஆய்வுக்கு வந்த ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த மீனவர்கள்
எத்தனை ஆட்சியர்கள் வந்து பார்த்தாலும் நிலைமை மாறலை முட்பதராய் மாறிய சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியர் பிரதாப்பிடம் திமுக நிர்வாகிகள் வேதனை தெரிவித்தனர் பாதுகாப்பான படகுப் போக்குவரத்து ஏற்படுத்திட வேண்டும் ஆய்வுக்கு வந்த ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த மீனவர்கள் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கோட்டை குப்பம் ஊராட்சியில் தோணிரேவு கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் சுற்றுலா தளம் வளர்ச்சி குறித்து ஆய்வு பணிகளை மேற்கொண்டார் அப்போது அங்கு முட்பதராக மாறிக் கிடந்த சுற்றுலா தல கழிப்பிடங்கள் பயணிகள் தங்கும் கட்டிடங்களை பொதுப்பணித்துறை கட்டிட பராமரிப்பு அதிகாரிகளால் முறையாக பராமரிக்கப்படாமல் வீணாகி இருப்பதையும் பார்த்த அவர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் அனுமதி இன்றி எந்த பணிகளையும் இங்கு மேற்கொள்ளக்கூடாது அனுமதி பெற்று முறையாக பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் குப்பை கழிவுகள் நிறைந்துள்ளதாகவும் கூடுதல் குப்பை அள்ளும் வாகனங்களை ஊழியர்களை பயன்படுத்த வேண்டும் எனவும் மின்விளக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்ய வேண்டும் எனவும் அரசு பணத்தில் ஊதியம் வாங்கும் ஊராட்சி செயலாளர் முறையாக பணியை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார் சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் பாதுகாப்பான படகு சவாரி மேற்கொள்ள ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் எத்தனை ஆட்சியர் வந்து பார்த்து சென்றாலும் சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெறாமல் உள்ளதாகவும் திமுக நிர்வாகிகள் ஆட்சியரிடம் தெரிவித்தனர். ஆய்வின் போது பொன்னேரி வட்டாட்சியர் சிவகுமார் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்
Next Story