தோப்புத்துறை வடகட்டளை ஸ்ரீ வன துர்க்கை அம்மன் கோயிலில்

தோப்புத்துறை வடகட்டளை ஸ்ரீ வன துர்க்கை அம்மன் கோயிலில்
X
சுயம்வர கலா பார்வதி ஹோமம் நிகழ்ச்சி
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தைச் சேர்ந்த, தோப்புத்துறை வடகட்டளை ஸ்ரீ வன துர்க்கை அம்மன் கோயிலில்,  சுயம்வர கலா பார்வதி ஹோமம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, வெங்கடேச சிவாச்சாரியார் மற்றும் சந்திரசேகர சிவாச்சாரியார் தலைமையிலான வேத விற்பன்னர்கள் கணபதி யாகம், மகாலட்சுமி யாகம் உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகளுடன், திருமணம் ஆகாத இருபாலரின் பிரார்த்தனைகளுக்கு சங்கல்ப்பம் செய்யப்பட்டு, சுயம்வர கலா பார்வதி ஹோமம் முடிந்து, மஹா பூர்ணாஹுதி, ஆராதனைகளுடன் நடைபெற்றது. பின்னர், பூஜிக்கப்பட்ட கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் தீபாராதனையும் நடைபெற்றது. இரவு சப்த சதி பாராயணம், நவாஷ்ரி ஹோமம், பைரவ யோகிநிபலிகள் உள்ளிட்ட பூஜைகளுடன் தீபாராதனையும் நடைபெற்றது. பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story