காங்கேயம் அரசு கலை கல்லூரி மாணவனுக்கு பாராட்டு விழா

X
தேசிய விளையாட்டு போட்டிகள் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி திருச்சியில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே முள்ளிப்புரம் காங்கேயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை மாணவன் ஜெயராமன் கலந்து கொண்டு 56 கிலோ சீனியர் எடை பிரிவில் 3-ம் இடமும், 60 கிலோ எடை பிரிவில் 6-ம் இடமும் பெற்றார். இந்த மாணவனுக்கான பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சே.ப.நசீம் ஜான் தலைமை தாங்கி பளுதூக்கும் போட்டியில் சாதனை படைத்த மாணவன் ஜெயராமனுக்கு நினைவு பரிசு-கேடயம், பாராட்டு சான்றிதழ் வழங்கினார். விழாவில் வணிகவியல் துறை தலைவர் கு.கவிதா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், இளங்கலை, முதுகலை. மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

