விடுதியில் தங்கி படிக்கும் பள்ளி - கல்லூரி மாணவர்களின்

X
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மையம் ஆகியவை இணைந்து நடத்திய, விடுதியில் தங்கி படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுகுமார் தலைமை வகித்தார். விடுதிக் காப்பாளர் சங்கத் தலைவர் விஸ்வலிங்கம் வரவேற்றார். நிகழ்ச்சியில், வேலை வாய்ப்பு நல அலுவலர் சீனிவாசன், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன், சிறப்பு பேச்சாளர்கள் செங்குட்டுவன், துரைக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில், விடுதி காப்பாளர்கள் ராமாமிர்தம், வீரமணி, இளமுருகு, மேகநாதன், கலைவாணி, மகேஸ்வரி, உமா, சங்கீதா, செந்தில்குமாரி மற்றும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில், விடுதி காப்பாளர் அகிலன் நன்றி கூறினார்.
Next Story

