ஜெயங்கொண்டத்தில் சிபிஎம் கட்சி அரியலூர் மாவட்ட குழு சார்பில் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம்

X
அரியலூர், பிப்.20- சிபிஎம் கட்சி அரியலூர் மாவட்ட குழு சார்பில் அரியலூர் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் ஜெயங்கொண்டம் ஜூப்ளி ரோடு வாரச்சந்தை அருகில் பல்கீஸ் வீட்டு வளாகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல் தலைமையில் நடைபெற்றது முன்னதாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ கந்தசாமி வரவேற்று பேசினார் சிபிஎம் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன், வி.தொ.ச.மாநில துணைச் செயலாளர் எஸ்.துரைராஜ், வி.தொ.ச மாநில பொருளாளர் அ.பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு விளக்கி பேசினர். அகில இந்திய மாநாட்டுக்கான தீக்கதிர் சிறப்பு சந்தா அரியலூர் சார்பில் 25 சந்தாவும், திருமானூர் சார்பில் ஒரு சந்தாவும், ஜெயங்கொண்டம் 2சந்தாவும் செந்துறை 2சந்தாவும் என மொத்தம் 30 சந்தாவை தீக்கதிர் மேலாளர் ஜெயபாலுவிடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கட்சியினுடைய செயல்பாடு செயல்படும் விதம், வி.ச, வி.தொ.ச உறுப்பினர்கள் பதிவு பிப்ரவரி 22 23 தேதிகளில் இயக்கம் தொடர்பாக திட்டமிடல் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாஜலம், ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.அம்பிகா, வி..பரமசிவம், அரியலூர் ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன், செந்துறை வட்டச் செயலாளர் கு.அர்ச்சுனன், திருமானூர் ஒன்றிய செயலாளர் எஸ்.பி சாமிதுரை, தா.பழூர் ஒன்றிய செயலாளர், ஜெ.ராதாகிருஷ்ணன், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் மு.வேல்முருகன், மின்னரங்க செயலாளர் ஆர்.தமிழ்ச்செல்வன், மாவட்ட குழு உறுப்பினர்கள் என்.அருணாச்சலம், இஎம்.மைதீன்ஷா, எஸ்.மலர்கொடி, ஆர் இளவரசன், டி.தியாகராஜன், ஆர் ரவீந்திரன், எஸ் மீனா மற்றும் இடை கமிட்டி உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், முன்னணி கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் பி.பத்மாவதி நன்றி கூறினார் .
Next Story

