மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்

X
அரியலூர்,பிப்.20: அரியலூரிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வாசகர் வட்டத் தலைவர் வீ.மங்கையர்கரசி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நிகழாண்டு புத்தக திருவிழா நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். மேலும் இக்கூட்டத்தில் கன்னியாகுமரி திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சிறப்பாக ஒத்துழைப்பு நல்கிய வாசகர் வட்ட உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர். செந்துறையை சேர்ந்த பிரபு}ரேவதி தம்பதியரின் மகள் தாரகை ரூ.1000 செலுத்தி மாவட்ட மைய நூலகத்தில் புரவலராக இணைந்து கொண்டார்.முன்னதாக மாவட்ட மைய நூலகர் இரா.முருகானந்தம் அனைவரையும் வரவேற்றார்.முடிவில் நூலகர் ந.செசிராபூ நன்றி கூறினார்.
Next Story

