ராமநாதபுரம் மீனவர்களுக்கு சிறை தண்டனை நீதிமன்றம் உத்தரவு

ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேருக்கு வருகின்ற மார்ச் 5ஆம் தேதி வரை சிறைக்காவல், இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு
ராமநாதபுரம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க சென்று யாழ்ப்பாணம் கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை இரண்டு விசைப்படகையும் அதிலிருந்து ஆறு மீனவர்களை கைது செய்தது இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஆறு பேரையும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் வருகின்ற மார்ச் 5ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல் தலைமன்னார் கடல் எல்லை பகுதியில் கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதில் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி வரை வவுனியா சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Next Story