திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
X
புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு பட்டாசு வெடித்து திமுகவினர் கொண்டாட்டம்
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக பணியாற்றி வந்த மதுரா செந்தில் அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, பரமத்தி வேலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான கே.எஸ்.மூர்த்தி அவர்களை மீண்டும் மாவட்ட செயலாளராக திமுக கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகவினர் கே.எஸ்.மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை நான்கு ரோடு பகுதியில் திமுக நிர்வாகிகள் தியாகு வெங்கடேஷ், அக்னி கார்த்திக் ஆகியோர் ஏற்பாட்டில் ,நான்கு ரோடு பகுதியில் பட்டாசு வெடித்து, பேருந்துகளில் செல்லும் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் இந்த நிகழ்வில் கௌரிசங்கர், கருங்கல்பாளையம் சரவணன், ஸ்ரீனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
Next Story