சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

X
Komarapalayam King 24x7 |20 Feb 2025 5:55 PM ISTகுமாரபாளையம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சமயபுரம் கோவிலில் பூச்சொரிதல் விழாவையொட்டி, பாண்டுரங்கர் கோவிலில் சீர் வரிசை பெறும் நிகழ்வு நடந்தது. கோவில் நிர்வாகம் சார்பில், சமயபுரம் மாரியம்மனுக்கு பாண்டுரங்கர் வழங்குவது போல் சீர் வரிசை வழங்கப்பட்டது. இதில் மஞ்சள், குங்குமம், பழங்கள், புடவை, வளையல், பூக்கள் என பல பொருட்கள் வழங்கப்பட்டன. பக்தர்கள் பாண்டுரங்கர் கோவிலிலிருந்து ஊர்வலமாக சீர் வரிசை தட்டுக்களுடனும், ஏராளமான பூக்கள் கூடையுடனும் வந்தனர். விட்டலபுரி, சேலம் சாலை, ராஜா சாலை, உள்ளிட்ட வீதிகளின் வழியாக, இடைப்பாடி சாலையில் உள்ள கோவிலில் ஊர்வலம் நிறைவு பெற்றது. சமயபுரம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தப்பட்டன. அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம்,அலங்காரம் செய்யப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
Next Story
