நுண்ணறிவு பிரிவு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

நுண்ணறிவு பிரிவு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
X
உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் தகவல்கள் மறைப்பு: நுண்ணறிவு பிரிவு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
திருப்பூர் மாநகரில் 8 போலீஸ் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு போலீஸ் நிலையங்களுக்கும் நுண்ணறிவு பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் வீரபாண்டி மற்றும் மத்திய போலீஸ் நிலைய நுண்ணறிவு பிரிவு போலீசார்களை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி வீரபாண்டி போலீஸ் நிலைய நுண்ணறிவு பிரிவு போலீஸ் செந்தில்குமார் மற்றும் மத்திய போலீஸ் நிலைய நுண்ணறிவு பிரிவு போலீஸ் குமாரவேல் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் போராட்டம் உள்ளிட்ட தகவல்களை தாமதமாக தெரிவிப்பது, வரும் மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளாதது உள்ளிட்ட காரணத்திற்காக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
Next Story