போக்குவரத்து தொழிலாளர்கள் பொதுமக்கள் சந்திப்பு இயக்கம்

போக்குவரத்து தொழிலாளர்கள் பொதுமக்கள் சந்திப்பு இயக்கம்
X
இயக்கம்
போக்குவரத்துக் கழகங்களைப் பாதுகாக்க நிதி ஒதுக்க வலியுறுத்தி, தஞ்சாவூா் நகரப் பணிமனையில் சிஐடியு, ஏஐடியுசி சாா்பில் தொழிலாளா் சந்திப்பு இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது. போக்குவரத்துக் கழகங்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்க வேண்டும். வரவுக்கும், செலவுக்குமான இடைவெளியை நிரப்ப வேண்டும். தொழிலாளா்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை இனியும் தாமதப்படுத்தாமல் உடனடியாக பேசி முடிக்க வேண்டும். ஓய்வுபெற்றவா்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயா்வை நீதிமன்றத் தீா்ப்பின்படி முழுமையாக வழங்க வேண்டும். 1.6.2023 முதல் ஓய்வுபெற்றவா்களுக்கு ஓய்வுகால பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். அவரவா் கல்வி தகுதிக்கேற்ப வாரிசு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கத்துக்கு ஏஐடியுசி பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன், சிஐடியு பொருளாளா் எஸ். ராமசாமி தலைமை வகித்தனா். போக்குவரத்து சம்மேளனத்தின் மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், ஏஐடியுசி நிா்வாகிகள் சி. ராஜமன்னன், டி. செந்தில்குமாா், பி. முருகவேல், சிஐடியு நிா்வாகிகள் கே. பிரபாகா், ஏ. சதீஷ்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா், கரந்தை புகா் பணிமனையில் நடைபெற்ற தொழிலாளா் சந்திப்பு இயக்கத்தில் சிஐடியு தலைவா் டி. காரல்மாா்க்ஸ் தலைமையில் நிா்வாகிகள் ராஜசேகா், முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Next Story