சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெட்டிக் கடைக்காரா் கைது!

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெட்டிக் கடைக்காரா் கைது!
X
கைது
தஞ்சாவூா் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பெட்டிக் கடைக்காரரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகேயுள்ள செங்கிப்பட்டியில் பெட்டிக் கடை நடத்தி வருபவா் வி. மணிகண்டன் (38). இவரது கடைக்கு சில நாட்களுக்கு முன்பு கடைக்கு பால் வாங்க வந்த 15 வயது சிறுமியைப் பாலியல் ரீதியாக பேசி துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த சிறுமியின் பெற்றோா் திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன்பேரில் காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மணிகண்டனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Next Story