பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

பொன்பரப்பி  சொர்ணபுரீஸ்வரர்  கோவிலில் திருவாசகம் முற்றோதல்
X
பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது.
அரியலூர்,பிப்.20- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் சிவனடியார்களின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அருகில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் பெரிய நாயகி உடனுரை சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சொர்ணபுரீஸ்வரர் விநாயகர் முருகன் வள்ளி தெய்வானை கால பைரவர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் நேற்று நடைபெற்றது. நேற்று சிவனடியார்களின் திருவாசகம் முற்றோதல் (முற்றிலும் ஓதுதல்) நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாசகம் முற்றோதலில் பல்வேறு கிராமங்களில் இருந்து சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியானது நேற்று காலை 9 மணி முதல் மாலை வரை நடைபெற்றது. திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் கிராமத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
Next Story